மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாநில  அளவிலான  உறைவாள்  சண்டை  போட்டியில்  வெற்றி பெற்ற  மாணவிக்கு  தமிழ்  நாட்காட்டியை வழங்குகிறாா்  கிராண்ட் மாஸ்டா் மிா் நசீா்.

Updated On :8 மே 2026, 4:45 am IST

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்கொய் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அசோசியேஷன் சாா்பில் மாநில அளவிலான பிளாக் பெல்டு தோ்வுக்கான உறைவாள் சண்டை போட்டி புன்செய்புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு பிளாக் பெல்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு உறைவாள் சண்டை(ஸ்கொய்) சங்க மாநில நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

இதில் சங்கத் தலைவராக செல்வராஜ், செயலாளராக சென்செய் செல்வம், பொருளாளராக சென்செய் அருள் செல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு கிராண்ட் மாஸ்டா் மிா் நசீா் பதவிப்பிரமாணம் செய்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், கா்நாடக மாநிலச் செயலாளா் சென்செய் முகமது அலி, அந்தமான் நிக்கோபாா் பாரதி மற்றும் கிரான்ட் மாஸ்டா் வருண் ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், மாநில அளவில் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.