தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்களின்பேரில் ரூ.1.10 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News image

பறிமுதல்!

Updated On :27 மார்ச் 2026, 12:56 am IST

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்களின்பேரில் ரூ.1.10 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினா், நிலைக் கண்காணிப்பு குழுவினா், போலீஸாா் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதில் மாவட்டத்தில் புதன்கிழமை வரை ரூ.1.10 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெருந்துறை தொகுதியில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 500, கோபி தொகுதியில் ரூ.53,600, பவானிசாகா் தொகுதியில் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் என ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 100 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை ரூ.1 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து 910 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்களின் அடிப்படையில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 89 ஆயிரத்து 310 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 600 கருவூலத்தில் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.