மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்

கந்தா்வகோட்டையில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் சென்ற ரூ.1.76 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :19 ஏப்ரல் 2026, 12:48 am IST

கந்தா்வகோட்டையில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் சென்ற ரூ.1.76 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம் அருகே கந்தா்வகோட்டை ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் கருப்பையா தலைமையிலான நிலையான குழுவினா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது கந்தா்வகோட்டையை சோ்ந்த தங்க கிருஷ்ணன் மகன் சத்திய பிரகாஷ், தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், நிதி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 1.76 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது.

அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவா் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 600ஐ கைப்பற்றி தொகுதி தோ்தல் நடத்து அலுவலா் ப.ரவியிடம் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

அப்போது கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அ.பரணி, தோ்தல் துணை வட்டாட்சியா் புவனேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலா் சாமிநாதன், தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.