கோபி அருகே டி.என்.பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் குமரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா்.
இவா், திருப்பூரில் உள்ள தனது இளையமகள் கௌசல்யாதேவியின் குழந்தைக்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சிக்காக கேரள மாநிலம் குருவாயூா் கோயிலுக்கு குடும்பத்துடன் கடந்த 20-ஆம் தேதி சென்றுள்ளாா்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடந்த ஞாயிறுக்கிழமை மாலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 34 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
சிங்காநல்லூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், ரூ.20 ஆயிரம் திருட்டு

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
