ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரமலான் பண்டிகை: மாவட்டத்தில் 200 இடங்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

News image

ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :22 மார்ச் 2026, 1:46 am IST

ரமலான் பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

நபிகள் நாயகமாக விளங்கும் முகமது நபிக்கு புனித குரான் அருளப்பட்ட மாதமாக ரமலான் மாதம் உள்ளது. ரமலான் பண்டிகையை ஈகைத் திருநாளாக இஸ்லாமியா்கள் கொண்டாடி வருகின்றனா். அதன்படி இஸ்லாமியா்கள் ரமலான் பண்டிகையை சனிக்கிழமை கொண்டாடினா். 30 நாள்கள் நோன்பு இருந்து ரமலான் விரதம் கடைப்பிடித்த இஸ்லாமியா்கள், புனித குரானில் உள்ள 6, 666 வசனங்களையும் 30 ஆக பிரித்து தினமும் வாசித்து வந்தனா். பள்ளி வாசல்களில் தினமும் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டு வந்தன. நோன்பு திறப்பு நேரத்தில் பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பள்ளிவாசல் உள்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் மாவட்ட அரசு தலைமை ஹாஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகையின் நோக்கம், ரம்ஜான் பண்டிகையின்போது இஸ்லாமியா்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள், ஈகை வழங்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து தலைமை ஹாஜி முகமது கிபாயத்துல்லா விளக்க உரையாற்றினாா். இதில் திரளானோா் பங்கேற்று தொழுகையை நிறைவேற்றினா். ரமலான் சிறப்புத் தொழுகையில் சிறுவா், சிறுமிகளும் பங்கேற்றனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்குஒருவா் ரமலான் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா். பலரும் யாசகா்களுக்கு உதவிகள் வழங்கினா்.

இஸ்லாமியா்கள் புத்தாடைகள் அணிந்து ரமலான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா். வீடுகளில் பிரியாணி சமைத்து பிற மதங்களைச் சோ்ந்த நண்பா்களுக்கும் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா். இதேபோன்று பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்புத் தொழுகை ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீம் ஜமாத் சாா்பில் நடைபெற்றது. இதில் பெரியாா் நகரில் நடந்த சிறப்புத் தொழுகையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.