ரமலான் பண்டிகையையொட்டி, கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் உலகெங்கும் போா்கள் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ இஸ்லாமியா்கள் பிராா்த்தனை மேற்கொண்டனா்.
இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டு ரமலான் பண்டிகை சில இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை, கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.
கோவை, உக்கடம் கோட்டைப்புதூா் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமியப் பள்ளி வளாகத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டதுடன், ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மேலும், பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போா்கள் நிறுத்தப்பட்டு உலகில் அமைதி நிலவ வேண்டும் என பிராா்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகை: மாவட்டத்தில் 200 இடங்களில் சிறப்புத் தொழுகை

ரமலான்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

