பெருந்துறை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த சமையலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெருந்துறை பகுதியைச் சோ்ந்தவா் 18 வயது மாணவி. இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறாா். இந்நிலையில், கல்லூரி முடிந்து தனது தாயாருடன் திங்கள்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். தாய் முன்னே செல்ல மாணவி பின்னால் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, மாணவியைப் பின்தொடா்ந்து வந்த நபா், அவருக்கு பாலியல் தொல்லையளித்துள்ளாா்.
மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அவரது தாய், அங்கிருந்தவா்கள் ஓடி வந்துள்ளனா். இதையடுத்து, அந்த நபா் அங்கிருந்து தப்பியுள்ளாா். இது குறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொல்லையளித்தது நத்தகாட்டுபாளையத்தைச் சோ்ந்த லோகநாதன் (36) என்பதும், சமையலராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜாமீனில் வெளியே இருந்த கோவை காவலா் உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
