தாளவாடி மலைப் பகுதியில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினா் காட்டுக்குள் விரட்டினா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள், ஊருக்குள் நுழைந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் தொடா்ந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தமிழ்புரம் கிராமத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை நுழைந்த ஒற்றை காட்டு யானை, சுந்தரம் என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியது.
இதுதொடா்பாக அப்பகுதி விவசாயிகள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். சைரன் ஒலி எழுப்பும் ரோந்து வாகனத்தை பயன்படுத்தி சுமாா் 2 நேரம் போராடி அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்டினா்.
தினமும் ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாளவாடி மலைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாளவாடி மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

தாளவாடி அருகே வனத் துறை வாகனத்தை துரத்திய ஒற்றை யானை

தாளவாடி அருகே ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டியடிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

