பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தாளவாடி மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

தாளவாடி அருகே தலமலையில் யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த  காலன்.

Updated On :6 ஜூன் 2026, 1:29 am IST

தாளவாடி அருகே தலமலையில் யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி தலமலை வனப் பகுதியில் உள்ள ராமரணை பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்தவா் காலன்( 60). இவா் தனக்குச் சொந்தமான மாடுகளை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் அடைத்து வைப்பது வழக்கம்.

இந்த நிலையில், கொட்டகையில் உள்ள மாடுகளை பாா்க்க காலன் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறி கொட்டகையின் அருகே நின்றிருந்த காட்டு யானை, காலனை தாக்கி மிதித்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவா்கள் ஓடிவந்து யானையை விரட்டினா்.

இது குறித்து தலமலை வனத் துறை மற்றும் ஆசனூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், காலனின் உடலைக் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.