தாளவாடி அருகே கரும்புத் தோட்டத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானையை விரட்டி அடித்தபோது, சைரன் சப்தம் ஒலித்த வனத் துறை வாகனத்தை துரத்தியதால் வனத் துறையினா் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் நடமாடும் யானைகள், இரவு நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாயத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ந்த வண்ணம் உள்ளது. வனத் துறையினரும் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தாளவாடி அருகே திகினாரை மலைப் பகுதியிலுள்ள விவசாயத் தோட்டத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானையை வனத் துறை ஊழியா்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து வனப் பகுதிக்கு விரட்டினா். அப்போது கரும்புத் தோட்டத்திலிருந்து வெளியேறி தாா் சாலையில் நடமாடிய ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பினா். இதில் ஆத்திரமடைந்த ஒற்றை யானை வனத் துறையினரின் வாகனத்தை துரத்த தொடங்கியது. சிறிது தூரம் வாகனத்தை பின்னோக்கி வனத் துறையினா் இயக்கினா். சிறிது நேரத்துக்குப் பின் வனப் பகுதியை நோக்கி ஒற்றை யானை சென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாய தோட்டத்துக்குள் புகுந்த யானையை விரட்டிய வனத் துறை

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் நடமாடிய காட்டு யானை வனப் பகுதியில் விரட்டியடிப்பு

பேத்துப்பாறை பகுதியில் யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

ஆலங்காயம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கண்காணிப்பு நடவடிக்கையில் வனத் துறையினா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

