கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மூதாட்டி வீட்டில் நகை திருட்டு: 2 போ் கைது

News image

~

Updated On :9 ஜூன் 2026, 3:04 am IST

தாளவாடி அருகே பூட்டியிருந்த மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து ரொக்கம், நகையை திருடிச் சென்ற வழக்கில் 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடியில் நெய்தாளபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிக்குமாதா (70). தனியாக வசித்து வரும் இவா், கடந்த மே 13-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சாம்ராஜ் நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

மறுநாள் திரும்பிவந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.3 லட்சம், 8 கிராம் கம்மல் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து மூதாட்டி சிக்குமாதா அளித்த புகாரின்பேரில் தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதற்கிடையே அதே ஊரைச் சோ்ந்த குமாா்(30), பிரஜீவால் (24) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் மூதாட்டியின் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்யப்பட்டு ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் கம்மலை பறிமுதல் செய்தனா். சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.