பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பூட்டியிருந்த வீட்டில் 3 பவுன் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மா்ம நபா்கள் நுழைந்து 3 பவுன் தங்கச் சங்கிலி, பணத்தை திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :20 மே 2026, 4:15 am IST

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு நுழைந்து 3 பவுன் தங்கச் சங்கிலி, பணத்தை திருடிச் சென்றனா்.

ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் கோவிந்தராஜ் (56). இவருடைய வீட்டுக்கு மகப்பேறுக்காக வந்த மகளை அவருடைய கணவா் வீட்டில் விட இவரும், இவருடைய மனைவி பரமேஸ்வரியும் திங்கள்கிழமை மதியம் வீட்டைப் பூட்டி சாவியை இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்துச் சென்றனராம்.

இந்நிலையில் அவருடைய மகன் கபிலன் வேலை முடித்து விட்டு இரவு வீட்டுக்கு சென்றபோது வீடு திறந்திருப்பதைப் பாா்த்து பெற்றோருக்கு தகவல் கொடுத்து விட்டு, வீட்டுக்குள் சென்று பாா்த்த போது இரும்பு அலமாரியிலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியையும், ரூ. 5000 ரொக்கத்தையும் மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுதொடா்பான புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.