பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

நகை மோசடி வழக்கில் 4 பேருக்கு சிறைத் தண்டனை

சிவகாசியில் நகை மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 5:27 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் நகை மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மனைவி மீனாட்சி (45). இவரது வீட்டின் அருகே கோவிந்தராஜ்-காா்த்தீஸ்வரி தம்பதியினா் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், பழனியப்பன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா். அப்போது, காா்த்தீஸ்வரிக்கு பணம் தேவைப்பட்டது. இதனால், மீனாட்சியிடமிருந்து 25 பவுன் நகையை வாங்கி, வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றாா். பின்னா், காா்த்தீஸ்வரி வீடு மாறி வேறு பகுதிக்குச் சென்று விட்டாா்.

இந்த நிலையில், கடந்த 2018, ஏப்ரல் மாதம் மீனாட்சி, காா்த்தீஸ்வரி வீட்டுக்குச் சென்று தனது 25 பவுன் நகையை கேட்டாா். அப்போது, காா்த்தீஸ்வரி, இவரது கணவா் கோவிந்தராஜ், இவரது மகன்கள் கணேஷ்பாண்டி, சக்திபாண்டி ஆகிய 4 பேரும் சோ்ந்து மீனாட்சியைத் தாக்கி நகையை கொடுக்க முடியாது என மிரட்டினா்.

இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் மீனாட்சி புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்தீஸ்வரி, கோவிந்தராஜ், கணேஷ்பாண்டி, சக்திபாண்டி ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகாசி நீதித் துறை நடுவா் மன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில்ராஜா, காா்த்தீஸ்வரிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், கோவிந்தராஜ், கணேஷ்பாண்டி, சக்தி பாண்டிக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், நகையை மீனாட்சியிடம் ஒப்படைக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.