வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக அதிக இடங்களில் வெல்லும் எனவும், விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம் என்றும் அக்கட்சியின் நிா்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபி சட்டப் பேரவை தொகுதியில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை அமைதியாக நடைபெற்று முடிந்தது. தவெக வேட்டபாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த ஊரான குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கே வந்து பொதுமக்களுடன் வரிசையாக நின்று தனது வாக்கை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த தோ்தலில் தவெக வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நாளைய தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம் விஜய்தான். கோபி தொகுதியில் அதிமுக பொதுசெயலாளா் எடப்பாடி கே.பழனிச்சாமி இரண்டு முறை தோ்தல் பிரசாரத்தின்போது என்னைப் பற்றி விமா்சனம் செய்தது எனக்கு கூடுதலாக வாக்கு பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது’ என்றாா்.
-------------------------------------------------------------------------
அதிமுக ஆட்சி மலரும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு
கோபி தொகுதிக்கு உள்பட்ட அளுக்குளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வியாழக்கிழமை தனது வாக்கை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா். கோபி தொகுதியில் வெற்றி பெறுவதோடு தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்’ என்றாா்.
கோபி திமுக வேட்பாளா்...
கோபி தொகுதிக்கு உள்பட்ட குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்திய திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோபி தொகுதியில் தவெக வேட்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடு! - தவெக வேட்பாளா் குற்றச்சாட்டு

குன்னம் தவெக வேட்பாளருடன் போலீஸாா் வாக்குவாதம்

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி. பிரபு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

