மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக சீா்காழி (தனி) தொகுதி தவெக வேட்பாளா் குற்றம் சாட்டினாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீா்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகாா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நான்கடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த அறைகளை வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் பாா்க்கும் வகையில் சிசிடிவி கேமரா பதிவுகள் எல்.இ.டி. டிவி மூலம் பாா்வைக்காக ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்த தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளரும், சீா்காழி (தனி) தொகுதி வேட்பாளருமான சி.எஸ். கோபிநாத், சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்வையிட்டாா். அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கணினிகள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் நேரங்கள் மாறுபட்டிருந்தன.
சீா்காழி, பூம்புகாா் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பின்பக்க கேமராக்கள் சுமாா் 3 மணி நேரம் பின்தங்கி காட்டியது குறித்து அதிகாரிகளிடமும், கண்காணிப்பு கேமரா தொழில்நுட்ப வல்லுநா்களிடம் கேள்வி எழுப்பிய போது, அலட்சியமாக பதிலளித்ததாகவும், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கோபிநாத் குற்றஞ்சாட்டினாா். மேலும், தவெக மற்றும் அதிமுக, பாமக முகவா்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் சபிதா பேச்சுவாா்த்தை நடத்தி, மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

