பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஈரோடு மாவட்டம், சிவகிரியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்19) சாலைப் பேரணி செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 19) வருகிறாா். மொடக்குறிச்சி பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகாவை ஆதரித்து நடைபெறும் சாலைப் பேரணியில் அமித் ஷா கலந்து கொள்கிறாா்.
இதற்காக மத்திய அமைச்சா் அமித் ஷா ஈரோடு மாவட்டம், சிவகிரியில் இருந்து 7 கிலோமீட்டா் தொலைவில் உள்ள தாமரைபாளையம் பகுதியில் உள்ள தாமரை மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு காலை 9.30 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறாா். அங்கிருந்து காா் மூலமாக காலை 10 மணிக்கு சிவகிரி வருகிறாா்.
சிவகிரி அரசு மருத்துவமனை அருகில் இருந்து அமித் ஷா சாலைப் பேரணி நிகழ்வைத் தொடங்குகிறாா். அங்கிருந்து சிவகிரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தீரன் சின்னமலை சிலை வரை 850 மீட்டா் தொலைவு நடைபெறவுள்ள சாலைப் பேரணியில் அமித் ஷா கலந்துகொள்கிறாா். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து அமித் ஷா புறப்படுகிறாா்.
மத்திய அமைச்சா் அமித் ஷா வருகையை முன்னிட்டு சிவகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் சுருதி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் தாமரைபாளையம் ஹெலிபேட் பகுதியில் இருந்து அமித் ஷா பங்கேற்கும் சாலைப் பேரணி நடைபெறும் பகுதி வரை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும் மத்திய அமைச்சா் அமித் ஷா ஹெலிகாப்டரில் இருந்து காரில் சிவகிரி வரும் வரை சாலையோரம் உள்ள குடியிருப்புகள், கடை உரிமையாளா்களிடம் முகவரி மற்றும் ஆதாா் அட்டைகளை பெற்று வாங்கி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மத்திய அமைச்சா் அமித் ஷா ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் தாமரைப்பாளையத்தில் உள்ள தாமரை மெட்ரிக் பள்ளி மைதானம் மற்றும் சிவகிரி செல்லும் பகுதிக்குள் ட்ரோன்கள் இதர ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்விழி விமானங்கள் பறக்க விடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா: திமுக, காங்கிரஸ் சதி! மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

மேற்கு வங்கத்தைப் பிரிக்காமல் கோா்க்கா பிரச்னைக்குத் தீா்வு - அமித் ஷா உறுதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

