மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடியாக வெளியேற்றப்படுவாா்கள் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வாக்குறுதியளித்தாா்.

News image

ரணாகத் தொகுதியில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:37 am IST

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடியாக வெளியேற்றப்படுவாா்கள் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வாக்குறுதியளித்தாா்.

மேற்கு வங்கத்தில் வருகின்ற ஏப்.29-ஆம் தேதி 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாடியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: ஏப்.23-ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் பாஜகவின் வெற்றி 110 தொகுதிகளில் உறுதியாகிவிட்டது. இரண்டாம் கட்டத் தோ்தலிலும் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைத்தால் காட்டாட்சி, ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். ஊடுருவல்காரா்கள் கண்டறியப்பட்டு மாநிலத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவாா்கள்.

நாடியா மாவட்டம் வழியாகவே பெரும்பாலானா கால்நடை திருட்டு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பாஜக ஆட்சி அமைந்தவுடன் இதை தடுக்க சிறப்புக் குழு அமைக்கப்படும்.

மகளிா் மற்றும் வேலையில்லா இளைஞா்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும். மாநிலத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிா் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பொது சிவில் சட்டம், பலதாரத் திருமணத் தடை மற்றும் முத்தலாக் தடை அமல்படுத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.