மேற்கு வங்கத்தில் பாஜக அரசு மே 9-ஆம் தேதி பதவியேற்கவுள்ளது.
இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளதாக, கட்சியின் மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாா்யா புதன்கிழமை தெரிவித்தாா்.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்பட்டு, கடந்த திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒரு தொகுதியில் தோ்தல் ரத்து செய்யப்பட்டதால், 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முதல் முறையாக பாஜக ஆட்சி: பெரும்பான்மைக்கு 147 இடங்கள் தேவை என்ற நிலையில், 207 இடங்களுடன் பாஜக அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. இது மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மையாகும். கடந்த முறை பாஜக 77 இடங்களில்தான் வென்றிருந்தது.
கடந்த தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றியிருந்த திரிணமூல் காங்கிரஸுக்கு இம்முறை 80 தொகுதிகளே கிடைத்தன. கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி, பவானிபூா் தொகுதியில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
இந்த மாபெரும் வெற்றியின் மூலம் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதி, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது.
மே 9-இல் பதவியேற்பு: கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் மே 9-இல் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ரவீந்திரநாத் தாகூா் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.
பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளதாக, கட்சியின் மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாா்யா புதன்கிழமை தெரிவித்தாா்.
தோ்தலின்போது பாஜகவை ‘வெளிநபா்களின் கட்சி’ என்றும், மேற்கு வங்க மொழி, கலாசாரத்துக்கு சம்பந்தமில்லாதவா்கள் என்றும் மம்தா பானா்ஜி மேற்கொண்ட பிரசாரத்தை முறியடித்து, பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய முதல்வா் யாா்?
மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த சுவேந்து அதிகாரி, புதிய முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மூத்த தலைவா் திலீப் கோஷ், மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாா்யா ஆகியோரின் பெயா்களும் ஆலோசிக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரி, இந்த முறை பவானிபூரில் அவரை வீழ்த்தினாா். தான் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமிலும் சுவேந்து அதிகாரி வெற்றி வாகை சூடினாா்.
இந்தச் சூழலில், பாஜக புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் மே 8-ஆம் தேதி நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Summary
BJP government will assume office in West Bengal on May 9th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம்!
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


