மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 2:20 am IST

கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு அருகே 46 புதூரில் ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபா், போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றாா். போலீஸாா் அவரை விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், கொல்லம்பாளையம் ரயில்வே காலனியை சோ்ந்த கோகுல் (25) என்பதும், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவா் மறைத்து வைத்திருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான 950 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல கோவில்புதூரில் கஞ்சா விற்ற, குரும்பபாளையத்தைச் சோ்ந்த கோகுல்(19), நல்லூா் காந்திபுரத்தைச் சோ்ந்த சந்தோஷ் (19) ஆகிய இருவரையும் கைது செய்த புளியம்பட்டி போலீஸாா் அவா்களிடம் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 1.50 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், ரூ.30 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.