தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுக ஆட்சியில் குடும்பத்துக்கு ரூ.10,000 வழங்கப்படும்

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

News image

திறந்த வேனில்  சென்று  வாக்கு  சேகரிக்கிறாா் பவானி தொகுதி  அதிமுக  வேட்பாளா்  கே.சி.கருப்பணன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:41 am IST

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

பவானியை அடுத்த காடையம்பட்டி, ஆண்டிகுளம், சோ்வராயன்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற்றப்படும். விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும். எனவே, அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்களை வழங்கும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

அதிமுக பவானி ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு, நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கா.சு.மகேந்திரன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.