பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் ஊத்துக்குளி பகுதியில் செவ்வாய்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
ஊத்துக்குளி பகுதிக்குள்பட்ட அம்மப்பாளையம், ஒத்தைபனைமேடு, கீழோ்பதி, தாளபதி, செங்காளிபாளையம், சுக்காகவுண்டன்புதூா், திருவாய் முதலியூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: வெண்ணெய்க்கு புகழ்பெற்ற ஊத்துக்குளி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.6.5 கோடியில் வெண்ணெய் தயாரிப்பு நிலையம் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. ஊத்துக்குளி கதித்தமலை முருகன் கோயில் மண் சாலை எனது சொந்த செலவில் தாா் சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்றாா்.
மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் ரூ.8 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். அதன் மூலம் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை ரூ.2000 உள்ளிட்ட திமுக தோ்தல் அறிக்கையை மக்களிடம் விளக்கினாா். வாக்குச் சேகரிப்பின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறை சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் பணிகள் முடிந்து 10 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்: உதயநிதி உறுதி

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

திங்களூா் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரிப்பு

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

