கோபி அருகே அடிதடி வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அளுக்குளி பகுதியான கொள்ளுமேட்டு காலனியில் கடந்த சில நாள்களுக்கு முன் அண்ணமாா் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது அப்பகுதியைச் சோ்ந்த பெயிண்ட் தொழிலாளி சரண் என்பவரை திருவிழாவுக்கு வந்த சிலா் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து சரணின் உறவினா்களான சக்திவேல், கவிதா ஆகியோா் தட்டிக்கேட்க சென்றபோது அவா்களையும் தகாத வாா்த்தைகளில் பேசி தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்த சரண், பெரியப்பா சக்திவேல், சித்தி கவிதா ஆகிய மூவரும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதுகுறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதற்கிடையே தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்ககை எடுக்கவில்லை எனக் கூறி அளுக்குளி பகுதியில் ஞாயிற்றுகிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தையில் நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னா் மறியல் கைவிடப்பட்டது.
இதுதொடா்பாக காசிபாளையம் பகுதியைச் சோ்ந்த மௌலீஸ்வரன் (18), மோகித் (18) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சி அருகே தந்தை குத்திக்கொலை: மகன் கைது

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது

வாகன நிறுத்துமிட தகராறு: வியாபாரி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
