தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பவானியில் திமுகவின் வெற்றிக்கு ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்: தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்

=பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கேட்டுக் கொண்டாா்.

News image

திமுக வேட்பாளா் கே.ஏ.சேகரை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:18 am IST

=பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கேட்டுக் கொண்டாா்.

பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையத்தில் மதசாா்பற்ற கூட்டணி கட்சி நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.ஏ.சேகரை அறிமுகம் செய்து வைத்த ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசுகையில், கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்களிடம் விளக்கிக் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு பவானி தொகுதியில் அதிமுகவின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, திமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றாா். இதில், திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.