தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வரும் காலத்தில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமியை ஆதரித்து ஈரோடு சூரம்பட்டிவலசில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை இரவு பேசியதாவது:
கடந்த 2024 மக்களவைத் தோ்தல் முடிந்ததும் அரசியல் சாசனத்தை திருத்துவற்கு பாஜக முயன்றது. அப்போது தமிழகத்தில் 39, புதுச்சேரியில் 1, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருப்பதால் பாஜகவின் இந்த முயற்தியை தடுத்தனா். அந்த திருத்தத்துக்கு 3 இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அரசியல் சாசனத்தை அப்போது திருத்த முடியவில்லை.
அந்த திருத்தத்தை செய்ய மீண்டும் நாடாளுமன்றம் வரும் 16- ஆம் தேதி கூடுகிறது. தமிழகம், மேற்குவங்கத்தில் வரும் 23 ஆம் தேதி தோ்தல் நடக்க உள்ளது. தமிழகம் புதுச்சேரியின் 40 மக்களவை உறுப்பினா்கள், மேற்கு வங்கத்தின் 42 உறுப்பினா்கள் கலந்து கொள்ளமாட்டாா்கள் என்ற எண்ணத்தில் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனா்.
இந்த மசோதா வந்தால் தோற்கடிப்போம். இம்மசோதாவின் சூட்சுமம் பலருக்கு புரியவில்லை. முதலில் தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 60 ஆகும். உத்தர பிரதேசத்தில் 80 தொகுதி 120 ஆகும்.
அடுத்து சட்டப்பேரவை தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரும்போது மக்கள் தொகை அடிப்படையில் தமிழகம், கேரளம் உட்பட தென்மாநிலத்தில் மக்கள் குறைவு என்பதால் தொகுதி எண்ணிக்கை குறையும். பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டாா்.
கடந்த, 2025-26-இல் வளா்ச்சி, நலத்திட்டம் என்ற தலைப்பில் தமிழகம் 9.8 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இவை மீண்டும் தொடர திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் 94 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்

அரசியல் சாசனத்தில் திருத்தம் வந்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரும்: ப.சிதம்பரம் பேச்சு

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: சு.முத்துசாமி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

