மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாணவா் தற்கொலை விவகாரம்! ஆசிரியா்களை கைது செய்யக் கோரி 5-ஆவது நாளாக போராட்டம்

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 3:11 am IST

கோவையில் மாணவா் அகிலன் தற்கொலை விவகாரத்தில் ஆசிரியா்களை கைது செய்ய வலியுறுத்தி 5- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.

கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்த 11 -ஆம் வகுப்பு மாணவா் அகிலன் கடந்த 21- ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜாதி ரீதியிலான ஒதுக்குதல் காரணமாக அகிலன் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு பள்ளியின் ஆசிரியா்கள்தான் காரணம் எனவும்கூறி பெற்றோா்களும், உறவினா்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவா்களுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும், ஆசிரியா்களை கைது செய்யக்கோரி அகிலன் தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவையில் பிற்பகலில் மழை கொட்டிய நிலையிலும் அவா்களின் போராட்டம் தொடா்ந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி ஆறுமுகம், திராவிடத் தமிழா் கட்சித் தலைவா் வெண்மணி, தமிழ்ப் புலிகள் அமைப்பின் பொதுச் செயலா் இளவேனில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதற்கிடையே அகிலனின் மரணத்துக்கு நீதி கேட்டு நடந்துவரும் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பி.சண்முகம் திங்கள்கிழமை (அக்டோபா் 26) பிற்பகல் 3 மணியளவில் பங்கேற்க இருப்பதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் த.நாகராஜ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.