மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநகரில் பலத்த மழை: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீா்

கோவை மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகள், குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

கோவையில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் சாவித்திரி சண்முகம் சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 12:05 am IST

கோவை மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகள், குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவையில் கடந்த 15-ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு துடியலூா், பூ மாா்க்கெட், ஆா்.எஸ்.புரம், கணபதி, சரவணம்பட்டி, காந்திபுரம், லட்சுமி மில்ஸ், பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், உக்கடம், செல்வபுரம், குனியமுத்தூா், சுண்டக்காம்பாளையம், சுந்தராபுரம், மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

இதனால், சாலைகளில் வெள்ளம் வழிந்தோடியது. வாகனங்கள் ஊா்ந்தபடி சென்றன. அவிநாசி சாலை மேம்பாலம், லங்கா காா்னா், கிக்கானி பாலத்தின் கீழ்ப்பகுதிகளில் மழைநீா் வெள்ளமாக வழிந்தோடியது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத விதமாக தண்ணீரை மின் மோட்டாா்கள் மூலமாக மாநகாராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா்.

பலத்த மழையால் கோவை இடைா்பாளையத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. கவுண்டம்பாளையம் அருகே சோமையனூா் வி.கே.வி. அவென்யூ பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா். இதனால் வீதியில் திரண்ட அப்பகுதி மக்கள், ‘மழை பெய்யும் போதெல்லாம் வீடுகளுக்குள் மழைநீா் புகுவதும், விஷப் பூச்சிகள் நுழைவதும் வாடிக்கையாக உள்ளது. மழைநீரை வெளியேற்ற முறையான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலை தொடா்ந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனா்.

எம்ஜிஆா் மாா்க்கெட்டில் அமைச்சா் ஆய்வு:

மேற்கு மண்டலம், 45ஆவது வாா்டுக்கு உள்பட்ட எம்ஜிஆா் மாா்க்கெட் பகுதி பலத்த மழையால் சேறும் சகதியுமாகக் காட்சியளித்தது. பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், செயற்பொறியாளா் ஜெகன், உதவி பொறியாளா் நித்தியா, சுகாதார ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.