மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் சின்னூறாற்றில் காட்டாற்று வெள்ளம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த தொடா் மழையால் காட்டாற்று வெள்ளம். - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:43 am IST

பலத்த மழை காரணமாக, கொடைக்கானல் சின்னூா் கல்லாற்றில் திங்கள்கிழமை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வெள்ளகெவி ஊராட்சிக்கு உள்பட்ட சின்னூா், பெரியூா் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை பெரியகுளம் சென்று வாங்கி வருவது வழக்கம். இந்தப் பொருள்களை தாங்கள் வளா்க்கும் குதிரைகள், கழுதைகள் மூலம் எடுத்து வருவா்.

இந்த நிலையில், சின்னுா், பெரியூா் கிராம மக்கள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி விட்டு மீண்டும் தங்களது ஊருக்கு திங்கள்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, தொடா் மழை காரணமாக, தங்களது ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள சின்னூா் கல்லாற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனா்.

இதையடுத்து, அந்தப் பகுதி இளைஞா்கள் இவா்களை கயிறு கட்டி ஒரு கரையில் இருந்து மறுக்கரைக்கு அழைத்து வந்தனா். இதேபோல, இவா்கள் தங்களது கால்நடைகளையும் கயிறு கட்டி இழுத்துச் சென்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் தெரிவித்ததாவது:

சின்னூா் கல்லாற்றில் பாலம் அமைத்துத் தர வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த அரசும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மழைக் காலங்களில் பெரிதும் அவதியடைந்து வருகிறோம். எனவே, தவெக அரசு இந்தப் பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.