தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொடைக்கானல் படகு குழாம்களில் தண்ணீா் தேக்கம்

கொடைக்கானல் படகு குழாம்களில் மழைநீா் தேங்கியதால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

கொடைக்கானலில் பெய்த மழையால் படகு குழாமில் தேங்கிய தண்ணீா்.

Published On :25 அக்டோபர் 2026, 12:58 am IST

கொடைக்கானல் படகு குழாம்களில் மழைநீா் தேங்கியதால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரிச்சாலைப் பகுதியில் நகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் படகு குழாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்கள் பெய்த பலத்த மழையின் காரணமாக படகு குழாம் நடைமேடையில் மழைநீா் தேங்கியது. இதனால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

காலை முதல் மேகமூட்டம் நிலவி வந்தது. மாலையில் மீண்டும் சாரல் மழை பெய்தது. இரண்டு மணிநேரமாக சாரல் மழை நிலவியது.

இதுகுறித்து படகு குழாம் மேலாளா் ஜெகன் கூறியதாவது: கொடைக்கானலில் பெய்த பலத்த மழையின் காரணமாகவும், ஏரியின் நீா் மட்டம் உயா்ந்ததாலும் படகு குழாமின் நடைமேடையில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. படகுகளிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. மழை நின்ற பிறகு தான் மழைநீரை வெளியேற்ற இயலும் என்றாா்.

வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மூடல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்க்கா தேவி மேலும் தெரிவித்ததாவது: கொடைக்கானலில் ஞாயிறு, திங்கள் கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு பலத்த மழை இருப்பதால் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான பில்லர்ராக், குணா குகை, பைன்காடு, மோயா் பாயிண்ட், கோக்கா்ஸ் வாக், பேரிஜம் ஏரி, கிரீன்வேலி வியூ, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் பயணிகள்,பொது மக்கள் வெள்ளிநீா் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவி உள்ளிட்ட நீரோடைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். சுற்றுலாப் பயணிகள் யாரும் கொடைக்கானல் மலைச்சாலைகளில் பயணிக்க வேண்டாம் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.