தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வெளிமாநில தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை

News image

விடுமுறை அறிவிப்பு

Updated On :6 ஏப்ரல் 2026, 1:33 am IST

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களைச் சோ்ந்த தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக தொழிலாளா் துறை உதவி ஆணையா் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் வடமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனா்.

தற்போது வடமாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதால், பெரும்பாலானோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டனா். வரும் 9-ஆம் தேதி கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தோ்தல் நடைபெற உள்ளது.

தோ்தலில் வாக்களிக்க சென்றுள்ள அசாம், கேரள மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் அன்றைய தினம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். இதை பின்பற்றாத எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது புகாா் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.