தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏப்.9-இல் புதுச்சேரி, கேரளம், அசாம் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வேலூா் மண்டலத்தில் பணிபுரியும் அம்மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:02 am IST

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வேலூா் மண்டலத்தில் பணிபுரியும் அம்மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா்களான எஸ்.தங்கதுரை (முதல் கோட்டம்), இ.செ.சாந்தினிபிரபா (இரண்டாம் கோட்டம்) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தோ்தல் வரும் ஏப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 பி-ன்படி, அனைத்து பொது, தனியாா் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டடம், இதர கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு தோ்தல் நாளான ஏப்.9-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு, தோ்தல் விடுமுறை அளிப்பதில் ஏதேனும் புகாா்கள் இருந்தால், வேலூா்-9842719537, 9442542795, 9976492942, ராணிப்பேட்டை- 9842719537, 9442542795, திருப்பத்தூா்-9884028066, 9976492942, திருவண்ணாமலை - 9884028066, 9788877199 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களின் நிா்வாகத்தினா் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காமல் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.