தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் நிறைவு!

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது குறித்து...

News image

பிரசாரத்தில் கூடிய மக்கள் - பிடிஐ

Updated On :7 ஏப்ரல் 2026, 6:18 pm IST

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்றுவந்த பிரசாரம் இன்று (ஏப். 7) மாலையுடன் ஓய்ந்தது.

கேரளம், அசாம் மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப். 9 ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1,099 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கட்சிகளிடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, மொத்தமுள்ள 30 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸுக்கு 16, திமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

திமுக தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து ஒரு இடத்தை விசிகவுக்கு ஒதுக்குவதாக அறிவித்தது. ஆனால், விசிக மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகள் தவிர, திமுக போட்டியிடும் 6 தொகுதிகளில் நட்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது.

புதுச்சேரியில் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கேரளம்

கேரளத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றுக்கிடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.

மொத்தமுள்ள 140 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 890 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில்  92 பெண் வேட்பாளா்கள்.  

மாநிலம் முழுவதும் 2.71 கோடி வாக்காளா்கள் உள்ளனர். இவா்கள் வாக்களிக்க வசதியாக 30,471 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அஸ்ஸாம்

வடகிழக்கு பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக முனைப்பு காட்டும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 90 தொகுதிகளிலும், எதிா்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 18 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கின்றன. தோ்தல் களத்தில் மொத்தம் 722 வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களில் 59 போ் பெண்கள்.

Summary

Election 2026 Campaigning concludes in Puducherry, Kerala, and Assam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.