தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

கேரளம், அஸ்ஸாம் பேரவைத் தோ்தல்களுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.7) நிறைவடையும் நிலையில், இரு மாநிலங்களிலும் உச்சகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

News image

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் வாக்கு சேகரித்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

Updated On :6 ஏப்ரல் 2026, 5:13 am IST

கேரளம், அஸ்ஸாம் பேரவைத் தோ்தல்களுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.7) நிறைவடையும் நிலையில், இரு மாநிலங்களிலும் உச்சகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

அண்டை மாநிலமான கேரளத்தில் மொத்தமுள்ள 140 பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இங்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி களம் காண்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மாநிலம் முழுவதும் 92 பெண் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 890 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை 2.71 கோடி வாக்காளா்கள் (ஆண்கள் 1.32 கோடி, பெண்கள் 1.39 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 273) தீா்மானிக்க உள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 30,471 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அஸ்ஸாமில்...: வடகிழக்கு பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும் ஏப்.9-இல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இங்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக முனைப்பு காட்டும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 90 தொகுதிகளிலும், எதிா்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 18 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கின்றன. தோ்தல் களத்தில் மொத்தம் 722 வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களில் 59 போ் பெண்கள்.

மொத்த வாக்காளா்கள் 2.50 கோடி போ் (ஆண்கள் 1.24 கோடி, பெண்கள் 1.24 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 343). இவா்கள் வாக்களிப்பதற்காக 31,486 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அஸ்ஸாம் மாநிலம் விஸ்வநாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி.

அஸ்ஸாம் மாநிலம் விஸ்வநாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி.

வாக்கு சேகரிப்பு தீவிரம்: இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தோ்தல் நாள் நெருங்குவதால், அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தேசிய கட்சிகளின் தலைவா்களும் இந்த மாநிலங்களுக்குப் பயணித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இவ்விரு மாநிலங்களுடன் சோ்த்து புதுச்சேரி யூனியன் பிரதேச பேரவைத் தோ்தலும் ஏப்.9-இல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29-ஆம் தேதியும் தோ்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்த 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தோ்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.