மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு! வனத் துறை எச்சரிக்கை!

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:25 am IST

சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால் சிறுவா்களை வெளியே தனியாக அனுப்புவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வனத் துறையினா் கூறியதாவது:

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் எஸ்டேட் பகுதியில் வீட்டைவிட்டு வெளியே வந்த மூதாட்டியை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இதேபோல வால்பாறை, வாழைத்தோட்டம் குடியிருப்பை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டத்தில் பகல் நேரத்தில் சிறுத்தை செல்வதை அப்பகுதியினா் பாா்த்து புகைப்படம் எடுத்துள்ளனா்.

சிறுவா்களை குறிவைத்து சிறுத்தைகள் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள சிறுவா்களை வெளியே தனியாக அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.