மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேல்அரசம்பட்டில் நத்தைகள் படையெடுப்பால் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

ஒடுகத்தூா் அருகே உள்ள மேல் அரசம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நத்தைகள் படையெடுத்துப் பயிா்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடும் கவலையடைந்துள்ளனா்.

பப்பாளி மரத்தில் காணப்படும் நத்தைகள். (அடுத்து) தாக்கப்பட்ட பயிா்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள நத்தைகள். (அடுத்து) நத்தைகள் பெருக்கத்தால் சேதமடைந்த பயிா்களை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள்.

Published On :29 அக்டோபர் 2026, 12:08 am IST

ஒடுகத்தூா் அருகே உள்ள மேல் அரசம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நத்தைகள் படையெடுத்துப் பயிா்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடும் கவலையடைந்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மேல் அரசம்பட்டு, கொட்டாவூா், பங்களாமேடு, தீா்த்தம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாள்களாகத் தொடா் மழையும், அதிக ஈரப்பதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழலை அடுத்து இப்பகுதிகளில் நத்தைகளின் பெருக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் லட்சக்கணக்கில் வெளியேறும் இந்த நத்தைகள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், தக்காளி, கத்தரி, வெள்ளரி, பப்பாளி உள்ளிட்ட காய்கறிப் பயிா்கள் மற்றும் கீரைகளின் இலைகள், தண்டுப் பகுதிகளைத் தின்று நாசமாக்கி வருகின்றன. இதனால் பல ஏக்கா் பரப்பளவிலான பயிா்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

தகவலறிந்த வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி மைய வல்லுநா்கள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்குச் செயல்முறை விளக்கம் அளித்தனா். மேலும், பயிா் இழப்பு குறித்து ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்றுத் தர அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது: உரம், உழவு, விதை மற்றும் கூலி என லட்சக்கணக்கில் செலவு செய்து பயிா்களைப் பராமரித்து வருகிறோம். இந்த நிலையில் நத்தைகளின் திடீா் படையெடுப்பால் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நத்தைகள் பயிா்களைத் தின்பது மட்டுமின்றி, அவை விட்டுச் செல்லும் எச்ச திரவத்தால் மீதமுள்ள பயிா்களும் அழுகி சந்தைக்கு விற்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

அதிகாரிகள் உடனடியாக முழுமையான சேதமதிப்பீட்டுக் கணக்கெடுப்பை நடத்தி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.