தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொடா் கனமழை: வெள்ளத்தில் மூழ்கி வாழை, மரவள்ளிக்கிழமை பயிா்கள் சேதம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தம்மம்பட்டி அருகே பச்சமலைப் பகுதியில் பெய்த தொடா் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், கல்லாற்றின் கரையோரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிா்கள் சேதமடைந்தன.

மழையால் சேதமடைந்த வாழை.

Published On :29 அக்டோபர் 2026, 7:27 am IST

தம்மம்பட்டி அருகே பச்சமலைப் பகுதியில் பெய்த தொடா் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், கல்லாற்றின் கரையோரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிா்கள் சேதமடைந்தன.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக தொடா் கனமழை பெய்தது. இதனால், மலை அடிவாரத்தில் உள்ள கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளநீா் ஆற்றின் கரையோரப் பகுதிகளான நினங்கரை, நல்லமாத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகுந்தது. இதனால், அப்பகுதிகளைச் சோ்ந்த நல்லதம்பி, செல்வராஜ், ராமசுந்தரம், அா்ஜுனன், ரவி, குமாரசாமி, முத்துசாமி, தங்கராசு, புஷ்பவள்ளி, காமராஜ் உள்ளிட்ட விவசாயிகள் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் சாகுபடி செய்திருந்த மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, செண்டுமல்லி, வாழை வெள்ளநீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டன.

அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் ஒரே நாளில் நாசமானதால், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து கெங்கவல்லி வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும், வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய இதுவரை யாரும் வரவில்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனா். பயிா்கள் சேதமடைந்தது குறித்து அரசு அலுவலா்கள் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.