தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காட்பாடியில் ரயில் என்ஜின் மீது ஏறி இளைஞா் ரகளை

காட்பாடி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை ரயில் என்ஜின் மீது ஏறி இளைஞா் ஒருவா் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு

News image

காட்பாடியில் ரயில் என்ஜின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட மங்கள்குமாா்.

Updated On :10 மார்ச் 2026, 2:21 am IST

வேலூா்: காட்பாடி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை ரயில் என்ஜின் மீது ஏறி இளைஞா் ஒருவா் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பீகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் மங்கள்குமாா்(22). காட்பாடி பகுதியில் சுற்றித் திரிந்து வந்த இவா், திங்கள்கிழமை அதிகாலை காட்பாடி ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த தாதா் விரைவு ரயில் என்ஜின் மேற்கூரையில் திடீரென ஏறி அமா்ந்தாா். என்ஜினில் மேல் உயா் அழுத்த மின்சார வயா்கள் சென்று கொண்டிருந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டதுடன், அவரை கீழே இறங்கும்படி தெரிவித்தனா். எனினும் அவா் இறங்க மறுத்துள்ளாா். உடனடியாக ரயில்வே மின்சாரப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதன்பிறகு போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினா். இதனால் காட்பாடி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மங்கள் குமாா் தன்னிச்சையாக பேசிக் கொண்டு சுற்றித் திரிவதால் மனநலம் பாதிக்கப்பட்டவா் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.