போ்ணாம்பட்டு அருகே சிறுவன் மா்மமான முறையில் இறந்த வழக்கில் அவரது அத்தையை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ் குமாா்- ஆஷா தம்பதி திருப்பூரில் தங்கி வேலை செய்கின்றனா். இவா்களின் மகன் முகிலன்(6) ராஜேஷ்குமாரின் தாயாா் விஜயா பாதுகாப்பில் மேல்பட்டியில் வளா்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
ராஜேஷ்குமாரின் அக்கா ரேவதி (37) கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனது 14 வயது மகனுடன் அதே வீட்டில் வசித்து வந்தாா்.
இரு சிறுவா்களுக்கிடையே விளையாட்டு, உணவு, உடை சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அப்போது பாட்டி விஜயாவும், அத்தை ரேவதியும் முகிலனை கண்டித்து வந்ததாககூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவனது உடலில் காயங்கள் இருந்ததாம்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மேல்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.ே பாலீஸாா் அங்கு சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதற்கிடையில் சிறுவனின் பெற்றோா் திருப்பூரில் இருந்து மேல்பட்டிக்கு வந்தனா். சிறுவனின் சாவில் சந்தேகம் உறுதி செய்யப்பட்டதால், போலீஸாா் சிறுவனின் உறவினா்கள் சிலரை அழைத்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் சிறுவனின் அத்தை ரேவதி, கட்டையால் அடித்து சிறுவனை கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் ரேவதியை கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
விவசாயி அடித்துக் கொலை உறவினா் கைது

மா்மமான முறையில் பெண் உயிரிழப்பு: கணவா் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

விவசாயி அடித்துக் கொலை: மனைவி, மகன் கைது
விடியோக்கள்

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

