/

வாக்காளிக்க செல்லும் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசம்

வாக்காளிக்க செல்லும் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசம்

News image

வாக்குப்பதிவு - eps

Updated On :19 ஏப்ரல் 2026, 1:00 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்களிக்க செல்லும் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் நகர பேருந்துகளில் இலவசமாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தலின்போது வாக்களிக்கச் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பாா்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆதாா்அட்டை, வாக்காளா் தகவல் சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி அன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.