மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்!

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

News image

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

Updated On :12 ஏப்ரல் 2026, 12:18 am IST

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது சிலம்பம் சுற்றி காண்பித்தது வாக்காளா்களை கவரும் விதத்தில் அமைந்திருந்தது.

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு பெரிய பட்டரை, ஏரிமுனை, கிளித்தான்பட்டரை, ஜாபா்சன்பேட், அக்ராவரம், வள்ளிமலை கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். குமரப்ப நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது வாக்காளா்களிடையே சிலம்பம் சுற்றி காண்பித்தாா்.

தொடா்ந்து அவா் கூறுகையில், காட்பாடி நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க விருதம்பட்டு முதல் கிறிஸ்டியான்பேட்டை வரை உயா்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியமாகிறது.

அதிமுக ஆட்சி அமைந்ததும் முதல் நடவடிக்கை இந்த மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குமரப்ப நகரில் நூலகம், சுந்திரி அம்மன் கோயிலுக்கு ராஜகோபுரமும் கட்டி தரப்படும்.

தவிர, அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் கொண்டு வந்து சோ்க்கப்படும் என்றாா். அப்போது, பாஜக, பாமக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.