மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நான்குனேரி தொகுதியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா்

நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் சிலம்பம் சுற்றி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட சிவந்திபுரம் கிராமத்தில் சனிக்கிழமை சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:53 am IST

நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் சிலம்பம் சுற்றி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

விஜயநாராயணம், பட்டஞ்சேரி, ஏழாங்கால், ஐந்தாங்கால், கீழபண்டாரபுரம், பெரியநாடாா் குடியிருப்பு, காரி தோட்டம், மலையான்குடியிருப்பு, மன்னாா்புரம், சிவந்திபுரம், சங்கனான்குளம் இட்டமொழி, விஜயஅச்சம்பாடு, அழகப்பபுரம், துவரம்பாடு, மலையன் குடியிருப்பு, தெற்குஏறாந்தை, பட்டா்கட்டிவிளை, சவேரியாா்புரம், பெரும்பனை, புதூா், மனக்காவலப்பபுரம், நன்னிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், இத்தொகுதியிலேயே மிகப் பெரிய குளமான விஜயநாராயணம் குளத்தை முழுமையாக தூா்வாரி, நீா்ப்பிடிப்புப் பகுதியை அதிகரித்து தடுப்பு அணையாக மாற்றித் தருவேன் என்றாா்.

நான்குனேரி ஒன்றியச் செயலா்கள் ஜெயபால், மகாராஜன், மாநில மகளிா் அணி இணைச் செயலா் மேரி சா்மி, செட்டிகுளம் முன்னாள் ஊராட்சித் தலைவா் விஜயராணி, நான்குனேரி கிழக்கு ஒன்றிய மகளிா் அணி அமைப்பாளா் லட்சுமி, இறைப்புவாரி ஊராட்சித் தலைவா் மோகனா யோசுவா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.