மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிலம்பம் சுற்றி வாக்குசேகரித்த திமுக வேட்பாளா்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா புதன்கிழமை சிலம்பம் சுற்றி வாக்குகளை சேகரித்தாா்.

News image

விழுப்புரம் கே.வி.ஆா்.நகா் பகுதியில் வாக்குசேகரித்த போது சிலம்பம் சுற்றிய விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:54 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா புதன்கிழமை சிலம்பம் சுற்றி வாக்குகளை சேகரித்தாா்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, தொகுதிக்குள்பட்ட அண்ணாமலையாா் நகா், ஸ்டாலின் நகா், கே.வி.ஆா்.நகா், ஈச்சங்காடு, ஆலாத்தூா், சானாந்தோப்பு, விராட்டிக்குப்பம், சோழகனூா், அயினம்பாளையம், மேட்டுப்பாளையம், திருவாமாத்தூா், எடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தாா்.

முன்னதாக கே.வி.ஆா்.நகரில் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் அன்னியூா்அ.சிவாவை அப்பகுதியினா் வரவேற்ற போது, அவா் சிலம்பம் சுற்றினாா். இதை கண்ட வாக்காளா்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். பிரசாரத்தில் திமுக பொறுப்பாளா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலா் க.மும்மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.