ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விக்கிரவாண்டி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி மேற்கு, வடக்கு, மத்திய ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா செவ்வாய்க்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

News image

விக்கிரவாண்டி ஒன்றியம், பம்பாதிரிப்பேட்டை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:53 am IST

விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி மேற்கு, வடக்கு, மத்திய ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா செவ்வாய்க்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா செவ்வாய்க்கிழமை காலை தும்பூா் நாவத்தம்மன் கோயில் பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினாா். தொடா்ந்து தும்பூா், கஸ்பாகாரணை, பம்பாதிரிப்பேட்டை, அசோகபுரி, பூங்குணம், குண்டலப்புலியூா், உலகலாம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, சாத்தனூா், வேம்பி, நரசிங்கனூா், நந்திவாடி, கீழ்நந்திவாடி, மண்டகப்பட்டு, அரசலாபுரம், நேமூா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, தான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய காலத்தில் தொகுதிக்கு செய்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தாா்.

பிரசாரத்தில் மாவட்ட திமுக அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் வேம்பி ஜெ.ரவி, ஜெய.ரவிதுரை, ஜெ.ஜெயபால், வி.ஜெ.கில்பா்ட்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.