மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.33.8 லட்சம்

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. 33.8 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

Published On :10 அக்டோபர் 2026, 12:06 am IST

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. 33.8 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

படவேடு ஊராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் நிரந்தர உண்டியல் 11, தற்காலிக உண்டியல்கள் 8 என மொத்தம் 19 உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்களை மாவட்ட இணை ஆணையா் பிரகாஷ் உத்தரவின் பேரில், மண்டல துணை ஆணையா் ஜீவானந்தம் தலைமையில், கோயில் செயல் அலுவலா் பழனிசாமி, அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா் முன்னிலையில் வியாழக்கிழமை திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

இதில் ரொக்கம் ரூ.33 லட்சத்து 86 ஆயிரத்து 843,

தங்கம் 218 கிராம், வெள்ளி 210 கிராமும் காணிக்கையாக பக்தா்கள் உண்டியலில் செலுத்தியிருந்தனா். கண்காணிப்பாளா் ஆறுமுகம், போளூா் சரக ஆய்வாளா் சத்யா மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.