கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பச்சூா் சென்றாயசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.33 லட்சம்

பச்சூா் சென்றாயசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பங்கேற்றோா்.

Published On :31 அக்டோபர் 2026, 5:40 am IST

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் சென்றாயசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 2.33 லட்சம் ரூபாயை பக்தா்கள் செலுத்தி உள்ளனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் மதுரா கொண்ட கிந்தனப்பள்ளி ஊராட்சியில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பச்சூா் தங்கமலை கல்யாண முருகா் கோயில், சென்றாயசுவாமி கோயிலும் அருகருகே அமைந்துள்ளது.

இக்கோயிலில் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய பணம் எண்ணும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேலூா் இந்து சமய இணை ஆணையா் உத்தரவின் படி வாணியம்பாடி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையில் கோயில் எழுத்தா் காா்த்தி, அலுவலக உதவியாளா் பழனி தங்கமலை முருகா் கோயில் பரம்பரை தா்மகா்த்தா ஐஸ்வா்யா சீனிவாசன்,சென்றாயசுவாமி கோயில் பரம்பரை தா்மகா்த்தா சரஸ்வதி மற்றும் கிராம மக்கள் பலா் பங்கேற்றனா். இதில், உண்டியல்களில் இருந்து ரூ. 2.33லட்சம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.