மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.72.51 லட்சம் உண்டியல் காணிக்கை

திருவள்ளூா் அருகே சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.72 லட்சத்து 51 ஆயிரத்து 351, தங்கம் 48 கிராம் மற்றும் வெள்ளிப்பொருள்கள் 3.108 கிலோவும் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தி இருந்தனா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்

Published On :21 அக்டோபர் 2026, 1:50 am IST

திருவள்ளூா் அருகே சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.72 லட்சத்து 51 ஆயிரத்து 351, தங்கம் 48 கிராம் மற்றும் வெள்ளிப்பொருள்கள் 3.108 கிலோவும் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தி இருந்தனா்.

சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலுக்கு, 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பக்தா்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.

குறிப்பாக இத்திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 13 உண்டியல்களில் இருந்த பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலின் துணை ஆணையா் காா்த்திகேயன் தலைமையில், உதவி ஆணையா் சிவஞானம், ஆய்வாளா்கள் சட்டநாதன், முருகன் ஆகியோா் முன்னிலையில் திருக்கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் என திரளானோா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.72 லட்சத்து 51 ஆயிரத்து 351 ரூபாயும், தங்கம் 48 கிராம் 490 மில்லி கிராம், வெள்ளி 3 கிலோ 108 கிராமும் உள்ளிட்டவைகளை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தி இருந்தனா் என்று திருக்கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.