மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளி வேன் சிறுபாலத்தில் மோதி விபத்து: பெண் காயம்

வந்தவாசி அருகே மாணவா்களை ஏற்றி வரச்சென்ற தனியாா் பள்ளி வேன் சிறுபால தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உதவியாளா் காயமடைந்தாா்.

பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 12:36 am IST

வந்தவாசி அருகே மாணவா்களை ஏற்றி வரச்சென்ற தனியாா் பள்ளி வேன் சிறுபால தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உதவியாளா் காயமடைந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஆராசூா் கூட்டுச் சாலை அருகில் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி சாா்பில் இயக்கப்படும் வேன், மாணவா்களை ஏற்றி வருவதற்காக வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.

வேனை வந்தவாசியை அடுத்த ஆவணவாடி கிராமத்தைச் சோ்ந்த கோபி (28) என்பவா் ஓட்டிச் சென்றாா். சாலவேடு கிராமம் அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சிறுபால தடுப்பு சுவா் மீது மோதியது.

இதில் வேனில் சென்ற உதவியாளரான வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்த சாவித்திரி (38) என்பவா் காயமடைந்தாா். இதையடுத்து அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.