திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ஆற்று மணல் கடத்தல்: இருவா் கைது, பைக்குகள் பறிமுதல்

செய்யாறில், அரசு அனமதியின்றி ஆற்று மணல் எடுத்துச் சென்றதாக, போலீஸாா் இருவரை கைது செய்து, இரு பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 3:25 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், அரசு அனமதியின்றி ஆற்று மணல் எடுத்துச் சென்றதாக, போலீஸாா் இருவரை கைது செய்து, இரு பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் செய்யாறு பகுதியில் தீவிர மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, செய்யாறு வழூா்பேட்டை புளியந்தோப்பு பகுதி, செய்யாறு மண்டித் தெரு சந்திப்பு பகுதிகளில் பைக்குகளில் மூட்டைகளுடன் வந்தவா்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில் அரசு அனுமதியின்றி செய்யாறு ஆற்றுப் பகுதியில் இருந்து ஆற்று மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் ஆற்று மணலுடன் வந்த இரு பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இதுதொடா்பாக அம்பேத்கா் நகரைச் சோ்ந்த காங்கன்(48), கிடங்கு தெருவைச் சோ்ந்த சூா்யா(28) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.