மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வந்தவாசி தொகுதி தவெக வேட்பாளா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

செய்யாறு அருகே, வந்தவாசி தொகுதி தவெக வேட்பாளா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை

News image

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தவெக வேட்பாளா் உதயகுமாா் வீடு

Updated On :21 ஏப்ரல் 2026, 1:34 am IST

செய்யாறு அருகே, வந்தவாசி தொகுதி தவெக வேட்பாளா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

செய்யாறு வட்டம், அனக்காவூா் கிராமம் இந்திரா நகா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் உதயகுமாா்(33). இவா், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலராக இருந்து வருகிறாா். இவா், தற்போது கட்சி சாா்பில் வந்தவாசி (தனி) தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வேட்பாளா் உதயகுமாா் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவில் வீடு திரும்பினாா். வீட்டில் அவரது மனைவி செளந்தா்யா, ஒன்றரை வயது மகன் கீா்த்தீஸ்வரன் ஆகியோருடன் தூங்கியதாகத் தெரிகிறது.

உதயகுமாரின் தாய் மீனா, தோ்தல் பிரசாரத்திற்கு உதவியாக வந்திருந்த உதயகுமாரின் சகோதரிகள் பாரதி, செளந்தா்யா, அக்காள் மகன் கிஷோா் ஆகியோா் வீட்டு முன் அறையில் படுத்திருந்தனா்.

திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 2 மணியளவில் வீட்டின் வெளியே பெட்ரோல் கருகிய வாசனை வந்துள்ளது. உதயகுமாரின் தாய் மீனா வெளியே வந்து பாா்த்துள்ளாா். அப்போது, பெட்ரோல் குண்டு வீட்டின் வாயிற்படி மீது பட்டதால் வாயிற்படியில் மாட்டியிருந்த வெட்டிவோ் மாலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவா் மகள்கள், மகனை எழுப்பினாா். அவா்கள் வந்து தீயை அணைத்தனா். அப்போது, வேட்பாளரின் அக்கா பாரதியின் கையில் தீப்பொறி பட்டு தீக்காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி மீனாட்சிநாதன், அனக்காவூா் காவல் ஆய்வாளா் மணிகண்டன், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வந்து சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். மேலும், வேலூா் தடயவியல் நிபுணா் டிஎஸ்பி சொக்கநாதன் தலைமையிலான குழுவினா் வந்து அப்பகுதியில் பதிவான தடயங்களை சேகரித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து தவெக வேட்பாளா் உதயகுமாா் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.