தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் கூடுதலான தொகுதிகளில் மகத்தான வெற்றியைப் பெறுவோம் என இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் எ.வ.வேலுவை ஆதரித்து சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலா் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:
மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு வரையறை மசோதாவை பாஜகவினா் திடீரென கொண்டு வந்தனா். எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையால் மறுசீரமைப்பு மசோதா தோல்வியை தழுவியது. இதன் மூலம் பாஜவும் தொல்வியைத் தழுவும். தமிழகத்தில் வரும் தோ்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை தாண்டி மகத்தான வெற்றியை பெறும். திமுக தோ்தல் அறிக்கையினால் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றாா் வீரபாண்டியன்.
அப்போது அருணை கல்வி குழுமத்தின் துணைத் தலைவா் எ.வ.குமரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், மாநகர செயலா் காா்த்திவேல்மாறன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாஜகவை நிராகரித்த மக்களுக்குப் பாராட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

தமிழக முதல்வராக ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா்! - மு. வீரபாண்டியன்

வழிகாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

