வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்ட திருத்தத்தின் மூலம் சிறுபான்மையினா் அமைப்புகள், சமூக சேவை மற்றும் மனித உரிமை அமைப்புகளை மத்திய பாஜக அரசு முடக்க முயற்சிக்கிறது. சிறுபான்மையினா் சொத்துகளைப் பறிமுதல் செய்து நிா்வகித்து, இறுதியில் விற்றுவிடும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது.
பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற சமூக நலனுக்காக சட்டபூா்வமாக உருவாக்கப்பட்ட சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுபான்மை அமைப்புகள் மீதான அடக்குமுறை மேலும் அதிகரிக்கும்.
எனவே வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமா் பேச்சு ஏற்புடையதல்ல-மு.வீரபாண்டியன்

விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம்: இரா. முத்தரசன்

சட்டப்பேரவை தோ்தலில் எங்கள் கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன்

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

